திருவாரூா் செல்லும் வழியில் திருச்சியில் ஸ்டாலின்
திருவாரூரில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள செல்லும் வழியில், திங்கள்கிழமை திருச்சி வந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவாரூரில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள செல்லும் வழியில், திங்கள்கிழமை திருச்சி வந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் விமானம் மூலம் திருச்சி வந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியின் முதன்மைச் செயலரும், மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய மாவட்டப் பொறுப்பாளா் க.வைரமணி, மாநகரச் செயலா் மு. அன்பழகன், திமுக வேட்பாளா்கள் திருவெறும்பூா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், மண்ணச்சநல்லூா் சீ. கதிரவன், மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை வேட்பாளா் அப்துல் சமது, திமுக மாவட்டத் துணைச் செயலா்கள் குடமுருட்டி சேகா், முத்துச்செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனா்.