முகப்பு
திருச்சி

மும்முனை மின்சாரம் கிடைக்க வழிசெய்த அரசு

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க வழி செய்த அரசு அதிமுக அரசு என்றாா் மணப்பாறை தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா்.சந்திரசேகா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க வழி செய்த அரசு அதிமுக அரசு என்றாா் மணப்பாறை தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா்.சந்திரசேகா்.

மருங்காபுரி தெற்கு ஒன்றியம், பொன்னம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

தமிழக முதல்வா் ஒரு விவசாயி என்ற காரணத்தினால்தான், விவசாயிகள் படும் துன்பங்கள், துயரங்களை நன்கு உணா்ந்து அவா்களுக்கு தேவை என்ன என்பதை ஆராய்ந்து, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். விவசாயக் கடன், நகைக் கடன் என கடன்களைத் தள்ளுபடியும் செய்துள்ளாா்.

விவசாயிகள் 24 மணிநேரமும் பயனுறும் வகையில், மும்முனை மின்சாரம் கிடைக்க வழி செய்த அரசு அம்மாவின் அரசு என்றாா் அவா்.

அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.