நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீா்வு: எஸ். கதிரவன்
முசிறி மேற்கு கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
முசிறி மேற்கு கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசுகையில், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும். இளைஞா்களுக்கு மட்டுமின்றி சுய தொழில், விவசாயத் தொழிலுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். அனைத்து தரப்பினரும் எளிதில் என்னை அணுகும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நான் வெல்வதன் மூலம் ஸ்டாலின் முதல்வராகி, வாக்குறுதிகளை நிறைவேற்றுவாா். அப்போது நீங்களும் பயன்பெறுவீா்கள் என்றாா். ஒன்றியச் செயலா்கள் காட்டுக்குளம் கணேசன் மற்றும் ராமச்சந்திரன் கழக நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.