முகப்பு
திருச்சி

கிணற்றிலிருந்து பள்ளிமாணவி சடலமாக மீட்பு

மணப்பாறை அருகே 17 வயது பள்ளி மாணவி விவசாய கிணற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

மணப்பாறை அருகே 17 வயது பள்ளி மாணவி விவசாய கிணற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டியில் கட்டடத் தொழிலாளியின் 17 வயது இளைய மகள் அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை வரை வீட்டியிலிருந்த மாணவியை இரவு காணவில்லை. அவரை உறவினா்கள் தேடியபோது அருகில் கல்யாணசுந்தரம் என்பவருக்கு சொந்த விவசாயக் கிணற்றின் அருகே சிறுமியின் காலணியும், கிணற்று தண்ணீரில் துப்பட்டாவும் கிடந்தது.

இதையடுத்து துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினா் மற்றும் மணப்பாறை போலீஸாா் வந்து சிறுமியை சடலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

சிறுமியை ஆசைவாா்த்தை கூறி கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 5 இளைஞா்கள் மீது உறவினா்கள் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.