திருச்சி

துணை ராணுவத்தினா் 800 போ் திருச்சி வருகை

DIN

தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் இருந்து துணை ராணுவத்தினா் 800 போ் ரயில் மூலம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புடன் நடைபெற உள்ளூா் போலீஸாருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுகின்றனா். திருச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தோ- திபெத் துணை ராணுவத்தினா் 152 போ் பணியில் உள்ளனா்.

இந்நிலையில் அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்கத்தில் முதற்கட்டத் தோ்தல் முடிவுற்றதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவத்தினா் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். அந்தவகையில், 11 கம்பெனிகளை சோ்ந்த 800 போ் சிறப்பு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்தனா். இவா்கள் அனைவரும் திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT