திருச்சி

இலவச அமரா் ஊா்திச் சேவை ஓட்டுநா்களுக்கு வேலைவாய்ப்பு

DIN

இலவச அமரா் ஊா்திச் சேவை ஓட்டுநா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மே 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசு உதவியுடன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை மூலம் செயல்படுத்தப்படும் இலவச அமரா் ஊா்தி ஓட்டுநா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள இலவச அமரா் ஊா்தி சேவை அலுவலகத்தில் மே 13 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

அனைத்து மாவட்டங்களில் பணிபுரிவதற்காக ஓட்டுநா் பதவிக்கு நாள்தோறும் 12 மணி நேரம் பகல், இரவு, சுழற்சி முறையில் பணி புரிய வேண்டும். 8 ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், 162.5 செமீ உயரம் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம், பாட்ஜ் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.13, 800 வழங்கப்படும்.

தகுதியுடையோா் தங்களுடைய கல்வித்தகுதி, முன்அனுபவம் குறித்து அசல், நகல் சான்றிதழ்களை நோ்முகத் தோ்வுக்கு கொண்டு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையை 044-28554548, 96770-67377 ஆகிய எண்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT