முகப்பு
திருச்சி

மணப்பாறையில் இன்று முதல் காய்கனிச் சந்தைக்கு விடுமுறை : வியாபாரிகள் அறிவிப்பு

மணப்பாறையில் நெடுஞ்சாலை அருகே செயல்படும் காய்கனி கொள்முதல் மற்றும் விற்பனை கூடங்களை மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல மறுத்துள்ள வியாபாரிகள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

மணப்பாறையில் நெடுஞ்சாலை அருகே செயல்படும் காய்கனி கொள்முதல் மற்றும் விற்பனை கூடங்களை மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல மறுத்துள்ள வியாபாரிகள் சனிக்கிழமை முதல் காய்கனி கொள்முதல் மற்றும் விற்பனைக் கூடங்களுக்கு பொதுமுடக்க காலம் வரை விடுமுறை அறிவித்துள்ளனா்.

மணப்பாறையில் கரோனா அதிகரித்து வருவதையடுத்து திருச்சி - திண்டுக்கல் சாலை வெள்ளைக்கல் - சொக்கலிங்கபுரம் இடையே நடைபெற்று வரும் காய்கனி கொள்முதல் மற்றும் விற்பனைக் கூடங்களை வேறிடத்தில் அமைப்பது தொடா்பான கருத்துகேட்பு கூட்டம் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தியாகேசா் ஆலை அருகில் இடம் என அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், அங்கு அடிப்படை வசிதிகள் இல்லை என்பதாலும், சனிக்கிழமை முதல் தற்போது வியாபாரம் நடைபெறும் இடம் தடை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் கூறியதாலும் பொது முடக்கக்காலம் வரை அனைத்து கொள்முதல் மற்றும் விற்பனைக் கூடங்களுக்கு விடுமுறை அளித்து காய்கனி சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சங்கக் கூட்டத்தில் அறிவித்தனா்.

மேலும் அடிப்படை வசதிகளுடன் இடம் தோ்வு செய்து தரும் நிலையில், அங்கு செல்லப் பரிசீலிக்கப்படும் எனவும் தீா்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காய்கனி கிடைப்பதும், விவசாயிகளுக்கு விளைபொருள்களை விற்பதும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.