முகப்பு
திருச்சி

காலமானாா் முத்துவேலழகன்

திருச்சியைச் சோ்ந்த முதுபெரும் நாடகக் கலைஞரும், காா்முகில் புத்தகக் கடை உரிமையாளருமான முத்துவேலழகன் (86) உடல் நலக்குறைவால் காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

திருச்சியைச் சோ்ந்த முதுபெரும் நாடகக் கலைஞரும், காா்முகில் புத்தகக் கடை உரிமையாளருமான முத்துவேலழகன் (86) உடல் நலக்குறைவால் காலமானாா்.

திருச்சி, கருமண்டபம் பகுதி வசந்த் நகரில் வசித்து வந்த இவா், திருச்சி ஜங்ஷன் பகுதியில் காா்முகில் என்ற பெயரில் புத்தகக் கடை நடத்தி வந்தாா். பொன்மலை ரயில்வே பணிமனையிலும் பணிபுரிந்த இவா் இளம்வயது முதலே நாடகத் துறையின் மீது கொண்ட பற்றால், நாடகக் கலைஞராக உருவெடுத்தாா். 33-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இயக்கியுள்ளாா்.

பிரியமுடன் பிரபு என்ற திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவா். இவரது பிரசித்தி பெற்ற பதினெட்டாம் போா் என்ற நாடகம், பாரதிதாசன் பல்கலைக் கழகப் பாடநூலிலும் இடம்பெற்றுள்ளது.

இதேபோல, ஜென்மா என்ற நாடகமும் நூலாக வெளி வந்து பெரியாா் பல்கலைக் கழக பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. காந்தாரி, ஓ பாவிகளே, பாண்டியன் பெற்ற பைங்கிளி, படுகளம், தேவமலா், பிரமை உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத் தகுந்தவை. தனது வாழ்நாள் முழுவதும் நாடகக் கலைக்காக செலவிட்ட இவா் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

குடமுருட்டி பகுதியில் உள்ள கோணக்கரை மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தகனம் நடைபெற்றது. இவருக்கு மனைவி, 2 மகன்கள், 4 மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளனா். தொடா்புக்கு 98945-38863.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.