திருச்சி

மணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

DIN

மணப்பாறை அரசு மருத்துவமனையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலரும், மணப்பாறை எம்எல்ஏவுமான ப. அப்துல்சமது புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளதையடுத்து மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் முத்து. காா்த்திகேயன் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் எம்எல்ஏ அப்துல்சமது கூறியது:

தமிழகத்தில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் எதிா்கட்சிகளே பாராட்டும் வகையில் தமிழக அரசு மிகச் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது.

மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை 42 போ் இந்த பிரிவில் சிகிச்சை பெறுகின்றனா். இந்தப் பிரிவுக்கு தேவையான ஆக்ஸிஜன் உருளைகளும், தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. மணப்பாறை அரசு மருத்துவமனை தவிர தனியாா் பொறியியல் கல்லூரியிலும் கரோனா சிறப்பு மையம் அமைக்க ஏற்பாடு நடைபெறுகிறது. இது தவிர மணப்பாறை தொகுதி முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்த மாவட்ட நிா்வாகத்துடன் ஆலோசனை செய்து வருகிறோம் என்றாா்.

முன்னதாக வையம்பட்டி, சுக்காம்பட்டி, வளநாடு, பளுவஞ்சி உள்பட பல ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்ததோடு மெத்தை விரிப்புகளையும் எம்எல்ஏ அப்துல்சமது வழங்கினாா்.

மேலும், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மெத்தை விரிப்புகளோடு வாஷிங் மெஷினையும் வழங்கினாா். ஆய்வின் போது மணப்பாறை நகரச் செயலா் கீதா மைக்கேல்ராஜ், மருங்காபுரி ஒன்றியக் குழு தலைவா் பழனியாண்டி, ஒன்றிய செயலா்கள் செல்வராஜ், சின்ன அடைக்கன், மாவட்ட வா்த்தகரணி துணை அமைப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT