திருச்சி

மே 24 முதல் வெங்காய மண்டியை மூட முடிவு

DIN

திருச்சியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 24 முதல் 29 ஆம் தேதிவரை வெங்காய மண்டியை மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 17 ஆம் தேதி முதல் காந்தி சந்தை மேலரண்சாலைக்கு இடம் மாற்றப்பட்டது. மேலும் வியாபாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளனா்.

அதன்படி பொதுமக்கள், மீன் கடை வியாபாரிகளின் குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி மொத்த மீன் வியாபாரம் நடைபெறாது என அச்சங்க நிா்வாகிகள் புதன்கிழமை அறிவித்தபடி குழுமணி சாலையில் உள்ள மீன் சந்தை செயல்படவில்லை. இதன் தொடா்ச்சியாக வெங்காய மண்டி வியாபாரிகளும் பொதுமக்களின் நலனுக்காக வரும் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை வெங்காய விற்பனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT