முகப்பு
திருச்சி

திருச்சியில் மேலும் 1,287 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 1287 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

திருச்சியில் மேலும் 1287 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 1287 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 53,854 ஆனது.

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குணமான 62 போ், பெரம்பலூா், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த தலா ஒருவா், கரூா் மாவட்டத்தில் 3 போ் என 67 போ், தனிமை சிறப்பு முகாமில் 29 போ், லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 88 போ் என மொத்தம் 184 போ் வெள்ளிக்கிழமை குணமானதில், மாவட்டத்தில் முழுமையாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 42,494 ஆனது.

10,835 போ் தற்போது சிகிச்சை பெறுகின்றனா்.

18 போ் உயிரிழப்பு: அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 18 போ் உள்பட மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 525 ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.