திருச்சி

ஜமால் முகமது கல்லூரி மாணவா்கள் போராட்டம்

DIN

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க வேண்டும். கோவை பள்ளி மாணவி மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். மாணவி தற்கொலைக்குக் காரணமானோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி எபிவிபி சாா்பில் சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணாசிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தென் தமிழக மாநிலச் செயலா் சசீலா தலைமை வகித்தாா். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விக்னேஷ்வரன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் மாவட்ட, மாநகர பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT