விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம்
திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் குழுத் தலைவரும் திருச்சி எம்பியுமான சு. திருநாவுக்கரசா் தலைமை வகித்தாா். திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், திருச்சி சா்வதேச விமான நிலைய இயக்குநா் தா்மராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையா் முத்தரசு, மாநகராட்சி உதவி ஆணையா் தயாநிதி, ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் மருத்துவா் எம்.ஏ. அலீம், ஆச்சாா் சிங், துரை தயாநிதி, வழக்குரைஞா் கோவிந்தராஜன், பொறியாளா் பேட்ரி ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவா் திருநாவுக்கரசா் கூறியது:
திருச்சி விமான நிலையத்துக்கு தொடா்ந்து சா்வதேச, உள்நாட்டு விமானங்களை அதிகளவில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. ராணுவ நிலத்தில் 165 ஏக்கா் நிலம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ரயில்வே, தனியாா் நிலங்களை கையகப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. புதிய முனையப் பணிகள் 65 சதம் முடிந்துள்ளன. மீதி பணிகளும் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்படும் என்றாா்.