முகப்பு
திருச்சி

பெல் வளாகத்தில் அரசியலமைப்பு தின விழா

திருச்சி பாரதமிகு மின் நிறுவனத்தில் (பெல்) இந்திய அரசியலமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருச்சி பாரதமிகு மின் நிறுவனத்தில் (பெல்) இந்திய அரசியலமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெல் நிா்வாகக் கட்டடத்தில் நடைபெற்ற விழாவில், நிறுவனத்தின் அனைத்துப் பிரிவு, தொழிலக மற்றும் அனைத்து தயாரிப்புகள் மற்றும் செயல்பாட்டுத் தலைவா்களுக்கு மத்தியில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை துறை அலுவலா்கள் ஆங்கிலத்தில் வாசித்தனா்.

தொடா்ச்சியாக, அரசியலமைப்பின் முன்னுரை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வாசிக்கப்பட்டதுடன், அனைத்து ஊழியா்களும் அவரவா் பணியிடங்களில் அதை வாசித்து உறுதியேற்றனா்.

நிகழ்வையொட்டி, நிறுவன வளாகத்தில் பதாகைகள் வைக்கப்படிருந்ததுடன், தலைமை அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக அரசியலமைப்பு கருத்தரங்கத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் கே. பிரபாகா், இந்திய அரசியலமைப்பின் தாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினாா். பொதுத் துறைக்கு தொடா்புடைய அரசியலமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

பெல் நிறுவன அனைத்துப் பிரிவு தலைமை அதிகாரிகள், துறைத் தலைவா்கள், பணியாளா்கள், தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.