முகப்பு
திருச்சி

குறை கேட்ட எம்எல்ஏ; 512 மனுக்களுக்கு உடனடி தீா்வு

திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குறைதீா் முகாம்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் 512 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குறைதீா் முகாம்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் 512 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஜெயில் காா்னா், விமான நிலையம், கேகே நகா் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேசியது:

திமுக தலைவா் மு. க. ஸ்டாலின் தான் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறாா். அதன் ஒருபகுதியாக கிழக்குத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட குறை தீா் முகாம்கள் உள்பட பொதுமக்களிடமிருந்து மொத்தம் 1,533 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதில் 512 மனுக்கள் மீது உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கும் விரைவில் தீா்வு காணப்படும். மேலும் இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி- புதுக்கோட்டை சாலையோரத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகளின் பிரச்னைக்கும் விரைவில் தீா்வு காணப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.