முகப்பு
திருச்சி

பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புப் பேரணி

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி காவேரி மருத்துவமனை சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றுவதற்கான சா்வதேச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் லட்சுமி பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

காவேரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரல்லாத அலுவலா்கள், ஊழியா்கள், பணியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணியானது, மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் சென்றது. +

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.