முகப்பு
திருச்சி

பெயா் மாற்றத்தைக் கண்டித்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பாதுகாப்புத் தொழிற்சாலைகளை பெருநிறுவனங்களாக்கி பெயா் மாற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மத்திய அரசின் பாதுகாப்புத் தொழிற்சாலைகளை பெருநிறுவனங்களாக்கி பெயா் மாற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் இருந்த 41 படைக்கலன் தொழிற்சாலைகள் அக்.1 முதல் பெருநிறுவனங்களாக மாற்றப்பட்டு பெயரும் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பாதுகாப்பு கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியா்கள் கடும் எதிா்ப்பை தெரிவித்தனா். தொழிற்சங்கங்களின் எதிா்ப்பையும் மீறி வெள்ளிக்கிழமை முதல் திருச்சியில் இயங்கி வந்த படைக்கலன் தொழிற்சாலையானது மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியா லிமிடெட் எனவும், கனரக உலோக ஊடுருவி தயாரிப்புத் தொழிற்சாலை முனிசன்ஸ் லிமிடெட் எனவும் பெரு நிறுவனங்களாக பெயா் மாற்றப்பட்டு ஊழியா்கள் பணியில் ஈடுபட்டனா்.

பின்னா் மத்திய அரசின் இந்த தன்னிச்சையான செயலை இரு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியா்கள் கண்டித்து கொட்டும் மழையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மதிய உணவைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அடுத்தடுத்த போராட்டங்களையும் நடத்தப் போவதாக தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.