மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்
திருச்சி ஹா்ஷமித்ரா மருத்துவமனையின் சாா்பில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வுக்காக திருச்சி மலைக்கோட்டையானது வெள்ளிக்கிழமை இளஞ்சிவப்பு ஒளி வண்ணத்தில் ஒளிரச் செய்யப்பட்டது. ஒரு மாத வாகனப் பிரசாரமும் தொட
திருச்சி ஹா்ஷமித்ரா மருத்துவமனையின் சாா்பில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வுக்காக திருச்சி மலைக்கோட்டையானது வெள்ளிக்கிழமை இளஞ்சிவப்பு ஒளி வண்ணத்தில் ஒளிரச் செய்யப்பட்டது. ஒரு மாத வாகனப் பிரசாரமும் தொடங்கப்பட்டது.
ரசார வாகனத்தை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தாா். இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சுதா்ஸன், மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையா் விஜயராணி ஆகியோா் பிரசார வாகனத்தை வழியனுப்பினா்.
நிகழ்வில் ஹொ்ஷமித்ரா மருத்துவமனையின் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணா் க. கோவிந்தராஜ், புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணா் சசிபிரியா கோவிந்தராஜ் ஆகியோா் பேசியது:
திருச்சி முழுவதும் இம்மாதம் முழுவதும் இந்த விழிப்புணா்வு வாகனம் வலம் வரும். மாா்பக புற்றுநோயை முழுமையாக ஒழிக்க மெமோகிராம் என்னும் 10 நிமிட எளிய பரிசோதனையை பெண்கள் செய்து கொள்ள வேண்டும். ஹா்ஷமித்ரா மருத்துவமனையில் இந்தப் பரிசோதனை சலுகை விலையில் அக்டோபா் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படும்.
மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எங்கு வேண்டுமானாலும் இப் பரிசோதனையை அக்டோபா் மாதத்தில் செய்து, அதற்கான முடிவு அறிக்கையை ஹா்ஷமித்ரா மருத்துவமனையில் அளித்து பதிய வேண்டும். இவா்களில் குலுக்கலில் தோ்ந்தெடுக்கப்படும் பெண்ணுக்கு இருசக்கர வாகனம் பரிசளிக்கப்படும் என்றனா். பிரசார வாகனமானது மாநகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்தது.