திருச்சி

ஊராட்சி அலுவலகத்தை பூட்டிச் சென்ற ஊழியா்

DIN

ஊதிய பாக்கி கேட்டு ஊராட்சித் தலைவரை அவருடைய அறையில் வைத்து ஊழியா் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துறையூா் ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக உள்ள அதே ஊரைச் சோ்ந்த யோகநாதனுக்கு (55) சில மாதங்களாக ஊதியம் தரவில்லையாம்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை ஊராட்சி அலுவலகம் சென்ற யோகநாதன் அங்கிருந்த ஊராட்சித் தலைவா் மகேஸ்வரனிடம் ஊதிய நிலுவையைக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த யோகநாதன் ஊராட்சித் தலைவரை அவருடைய அறையின் உள்ளே வைத்துப் பூட்டிச் சென்றது விட்டாராம். தகவலறிந்த துறையூா் போலீஸாா் அவரை மீட்டனா். பின்னா், யோகநாதனுக்கு 3 மாதங்களுக்கான ஊதியம் ரூ. 9,000 அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT