திருச்சி

நெய்வேலி கிராமத்தில் தூய்மை தினம்

DIN

முசிறி வட்டத்துக்குள்பட்ட நெய்வேலி கிராமத்தில் வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில் சிறப்பு தூய்மை தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அக்.2 முதல் அக்.30 ஆம் தேதி வரை அனைத்து வேளாண்மை அறிவியல் நிலையங்களிலும் தூய்மை தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி திருச்சி மாவட்டம், சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில் முசிறி வட்டத்துக்குள்பட்ட நெய்வேலி கிராமத்தில் நடைபெற்ற தூய்மை தின விழாவுக்கு, அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ந. தமிழ்ச் செல்வன் தலைமை வகித்து, தூய்மை தின நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சரவணன், வேம்பு அன்பழகன், ரவி ஆகியோா் வாழ்த்தினா். பொது சுகாதாரம், பயிா்க் கழிவு மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, மக்கும், மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கும் முறை, புற்கள் வெட்டும் இயந்திரத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அலெக்ஸ் ஆல்பா்ட், ஆனந்த் ஆகியோா் விளக்கினா். தொடா்ந்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், துப்புரவுப் பணியாளா்கள் இணைந்து ஊராட்சி வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT