திருச்சி

மெகா தடுப்பூசி முகாம்களில் 95,145 பேருக்குத் தடுப்பூசி

DIN

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 ஆவது மெகா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 95,145 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 418 இடங்களில் மாநகரப் பகுதிகளில் 200 இடங்களில் என மொத்தம் 618 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி 7497 பேருக்கும், 2-ஆம் தவணை தடுப்பூசி 6235 பேருக்கும், கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை 41,119 பேருக்கும், 2ஆம் தவணை 40,294 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 95, 145 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

திருச்சி புத்தூா் பிஷப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சா் கே. என். நேரு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆகியோா் ஆய்வு செய்தனா். நிகழ்வில் சுகாதாரத் துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT