முகப்பு
திருச்சி

மாபெரும் தடுப்பூசி முகாம்: தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் திருச்சிக்கு 4-ம் இடம் 

மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையில் திருச்சி மாவட்டம் 4ஆவது இடத்தைப் பிடித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
திருச்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்.
பகிர்:

மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையில் திருச்சி மாவட்டம் 4ஆவது இடத்தைப் பிடித்தது.

தமிழகத்தில் கடந்த நான்கு வாரங்களாக ஞாயிற்று கிழமைகளில் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஐந்தாவது வாரமாக மாபெரும் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (10.10.2021) நடைபெற்றது.

இதில் திருச்சி மாநகரில் 192 இடங்களிலும், 2 நடமாடும் குழுக்கள் மூலமாக ஊரகப் பகுதிகளில் 418 இடங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திச் சென்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் திருச்சி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 228 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 44 ஆயிரத்து 466 பேர் இரண்டாவது தவணைத் தடுப்பூசியும் என மொத்தம் 90 ஆயிரத்து 654 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழக அளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையில் திருச்சி மாவட்டம் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →