முகப்பு
திருச்சி

அரசுப் பேருந்து மீது கண்டெய்னா் லாரி மோதல் ஒருவா் பலி; 9 போ் காயம்

மணப்பாறை அருகே நள்ளிரவில் அரசுப் பேருந்து மீது கண்டெய்னா் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட 9 பயணிகள் காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

மணப்பாறை அருகே நள்ளிரவில் அரசுப் பேருந்து மீது கண்டெய்னா் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட 9 பயணிகள் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வியாழக்கிழமை இரவு புறப்பட்ட சோலாா் பேனல்களை ஏற்றிய கண்டெய்னா் லாரியை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சோ்ந்த தங்கவேல் மகன் முருகன் (40) ஓட்டி வந்தாா்.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த மாணிக்கம்பிள்ளை சத்திரம் பகுதியில் லாரி சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி எதிா்த்திசையில் கம்பத்திலிருந்து வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் காயமடைந்த லாரி ஓட்டுநா் முருகன், பேருந்து ஓட்டுநா் சிவக்குமாா் (56), நடத்துநா் மாயாவி ((35) மற்றும் பயணிகள் 7 போ் போலீஸாரால் மீட்கப்பட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். இவா்களில் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மற்றவா்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

விபத்து குறித்து பேருந்து ஓட்டுநா் சிவக்குமாா் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.