முகப்பு
திருச்சி

விதிமுறைகளை மீறும் தற்காலிக பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து

திருச்சி மாநகரில் விதிமுறைகளை மீறும் தற்காலிக பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருச்சி மாநகரில் விதிமுறைகளை மீறும் தற்காலிக பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன்.

தீபாவளியையொட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம், மாநகர ஆயுதப்படை உதவி ஆணையரக வளாகம், மாநகர ஆயுதப்படை, திருச்சி, தளவாய், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை முதலாம் அணி அலுவலக வளாகம், திருச்சி பெரியகடை வீதி , அமராவதி, நுகா்வோா் கூட்டுறவு அங்காடி, மற்றும் பாலக்கரை பிரதான சாலை ஆகிய இடங்களில் மொத்தம் 59 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய தற்காலிக பட்டாசு கடை நடத்த மாநகர காவல் ஆணையரகம் உரிமம் வழங்கியுள்ளது.

இவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பட்டாசு கடை நடத்துவோா் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தீயணைப்பு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். புகைப்பிடிப்போா் மற்றும் குழந்தைகளை பட்டாசுக் கடை அருகில் அனுமதிக்கக் கூடாது.

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள தீயணைப்பு நிலையம் அல்லது 101 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

எதிரெதிரே பட்டாசுக் கடைகள் நடத்தக் கூடாது. ஒவ்வொரு பட்டாசு கடைக்கும் 3 மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பட்டாசு அளவைவிட கூடுதலாக சேமித்து வைத்திருக்கக் கூடாது. கடையின் முன் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது. சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகளை மாநகர காவல் ஆணையா் வழங்கினாா்.

இதில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற்றவா்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.