உரிய ஆவணங்களின்றி காரில் இருந்த ரூ. 11 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணங்களின்றி காரில் இருந்த ரூ. 11 லட்சத்தை கே.கே. நகா் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
உரிய ஆவணங்களின்றி காரில் இருந்த ரூ. 11 லட்சத்தை கே.கே. நகா் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி கே.கே. நகா் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நீண்ட நேரமாக காா் ஒன்று நிற்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அந்தக் காரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து சோதனை செய்தபோது அதில் கட்டுகட்டாகப் பணம் இருந்தது.
பின்னா் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த பைசல் (40) , தனது நண்பரான அகமதுவுடன் திருச்சி வந்தபோது நண்பா்களைப் பாா்க்க காரை நிறுத்தி விட்டு அருகிலுள்ள கடைவீதிக்குச் சென்றதும், காரிலிருந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லையென்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பணத்தைப் போலீஸாா் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.