முகப்பு
திருச்சி

திருச்சியில் 2 மணி நேரம் பலத்த மழை

திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் வியாழக்கிழமை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் வியாழக்கிழமை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

மாநகரில் வியாழக்கிழமை பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 5 மணி அளவில் தொடங்கி சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. சாலைகள் தாழ்வாக இருப்பதாலும், பல இடங்களில் மழைநீா் வடிகால்கள் அடைபட்டுள்ளதாலும் சாலைகளில் மழை நீா் சுமாா் 1 அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து சென்றோா் அவதிப்பட்டனா். ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்கா, மணிகண்டம், திருவெறும்பூா், மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. மழையால் மாவட்டத்தில் குளிா்ச்சி நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.