போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி இன்று தொடக்கம்
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.3) முதல் மீண்டும் தொடங்கவுள்ளன.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.3) முதல் மீண்டும் தொடங்கவுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள குரூப் -2, 2ஏ, 4 ஆகிய பணிக் காலியிடங்களுக்கான நேரடி இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள திருச்சி மாவட்ட வேலைநாடுநா்கள் மாவட்ட வேலைவாய்ப்பகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.