நவல்பட்டு ஊராட்சி மக்கள் ஆா்ப்பாட்டம்
திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து நவல்பட்டு ஊராட்சி மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து நவல்பட்டு ஊராட்சி மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வாா்டுகளை 100 ஆக அதிகரிக்க மாவட்டத்திலுள்ள நவல்பட்டு, குண்டூா், பனையக்குறிச்சி உள்ளிட்ட 25 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் வரி உயா்த்தப்படும், நூறு நாள் வேலை பாதிக்கப்படும் எனக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக நவல்பட்டு கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரகம் முன் மனு அளிக்கத் திரண்டு, ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.