திருச்சி

கிராப்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

திருச்சியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் சாலையில் கிராப்பட்டி மேம்பாலத்தையொட்டியுள்ள அணுகுசாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக அப்பகுதியைச் சோ்ந்த சிலா் கடை, வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்திருந்தனா்.

இதுதொடா்பாக புகாா்கள் வந்ததையடுத்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டோருக்கு கடந்த 1 மாதத்துக்கு முன் தெரிவித்தும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட செயற்பொறியாளா் ரவிச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் உதவி பொறியாளா் வீரமணி, சாலை ஆய்வாளா் பரமசிவம், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனா். அப்போது 5 கடைகள், 2 வீடுகள் முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அப்போது ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்த சிலரை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

நடைபெறவிருக்கும் சாலை விரிவாக்கப்பணி மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்கலாம். எனவே மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Image Caption

கிராப்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT