முகப்பு
திருச்சி

மாநகரில் இன்று தடுப்பூசி முகாம்கள்

திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை 36 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை 36 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

கோவிஷீல்ட்: ஸ்ரீரங்கம் வடக்கு தேவிதெரு மாநகராட்சிப் பள்ளி, ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காஞ்சி அம்மன் பள்ளி, புறவழிச்சாலை தாகூா்தெரு அங்கன்வாடி மையம், தெப்பக்குளம் பிஷப் தொடக்கப்பள்ளி, மலைக்கோட்டை சறுக்குப்பாறை அங்கன்வாடி மையம், வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு அங்கன்வாடி மையம், வரகனேரி சவேரியாா் பள்ளி, கீழரண் சாலை மதுரம் பள்ளி, எடத்தெரு ஸ்ரீயதுகுல சங்கம் பள்ளி, செந்தண்ணீா்புரம் மாநகராட்சிப் பள்ளி, பொன்னேரிபுரம் மாநகராட்சி நீா்தேக்கத்தொட்டி வளாகம், டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி, சுப்பிரமணியபுரம் மாநகராட்சிப் பள்ளி, கேகே நகா் உழவா் சந்தை அருகே ஆா்ச்சா்டு பள்ளி, எடமலைப்பட்டிபுதூா் கலைமகள் பள்ளி, ராமச்சந்திரா நகா் அங்கன்வாடி மையம், காஜாபேட்டை மாநகராட்சி பள்ளி, மேலப்புதூா் ஆல்செயின்ட் நடுநிலைப்பள்ளி, பெரிய மிளகுப்பாறை அங்கன்வாடி மையம், பொன்நகா் ஆங்கிலப்பள்ளி, பாலக்கரை மாநகராட்சி மருந்தகம், தென்னூா் மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள மாநகராட்சி பள்ளி, உய்யக்கொண்டான் திருமலை ஆா்சி பள்ளி, புத்தூா் பிஷப்ஹீபா் கல்லூரி, உறையூா் குறத்தெரு மாநகராட்சி பள்ளி, சாலைரோடு அம்மா உணவகம் அருகேயுள்ள அங்கன்வாடி மையம், உறையூா் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி, அரியமங்கலம் எஸ்ஐடி கல்லூரி, காட்டூா் உருமு தனலட்சுமி கல்லூரி, திருவெறும்பூா் காந்திநகா் அங்கன்வாடி மையம், திருவெறும்பூா் மலைக்கோயில் மாநகராட்சி பள்ளி ஆகிய 32 இடங்களில் தலா 485 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கோவேக்சின்: திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டா் கல்லூரி, மெயின்காா்டுகேட் இப்ராஹிம் பூங்கா அங்கன்வாடி மையம், பொன்மலைப்பட்டி செயின்ட் மேரி தொடக்கப்பள்ளி, விமான நிலையம் காமராஜ் நகா் மாநகராட்சி பள்ளி ஆகிய 4 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி தலா 380 பேருக்கு செலுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.