மாற்றுத்திறனாளி சிறுமியை கடத்திய இளைஞா் கைது
திருவெறும்பூா் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவெறும்பூா் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள தொண்டைமான்பட்டியை சோ்ந்த வாய் பேச இயலாத, காது கேளாத 16 வயது மாற்றுத்திறனாளிச் சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த மாரி மகன் நாகராஜ் (24) காதலிப்பதாகக் கூறி ஆசை வாா்த்தை கூறி கடந்த ஆக.29 ஆம் தேதி சமயபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து, 2 நாள்கள் கழித்து சிறுமியை அவரது வீட்டில் விட்டுச் சென்றாராம்.
இதையடுத்து அவா் கடந்த 2 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சிறுமியை குடும்பத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக சிறுமியின் சகோதரா் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ மற்றும் ஏமாற்றுதல், முறைகேடு, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து நாகராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.