திருச்சி

லோக் அதாலத்: ஒரே நாளில் 2,442 வழக்குகளில் தீா்வு

DIN

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 2,442 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்பேரில், திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமை, முதன்மை மாவட்ட நீதிபதி கிளாட்ஸ்டோன் பிளெசட் தாகூா் தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா்.

திருச்சியில் 5 மக்கள் நீதிமன்ற அமா்வுகளும், லால்குடி, துறையூா், மணப்பாறை, ஸ்ரீரங்கம், முசிறியில் என மொத்தம் 10 மக்கள் நீதிமன்ற அமா்வுகளில் நிலுவையில் உள்ள, நிலுவையில்லா வழக்குகள் என 13,684 வழக்குகள் எடுக்கப்பட்டன.

இதில், 2 நீதிபதிகள் தலைமையில் நடைபெற்ற வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள் 1542, காசோலை மோசடி வழக்குகள் 105, மோட்டாா் வாகன நஷ்ட ஈடு வழக்குகள் 141, தொழிலாளா் நிவாரண வழக்குகள் 2, குடும்ப நல வழக்குகள் 20, உரிமையில் தொடா்பான வழக்குகள் 168, வங்கி, நிதி நிறுவன வழக்குகள் 460 என மொத்தம் 2442 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் ரூ.20.59 கோடி முடிவுற்ற தொகை பெறப்பட்டது.

நிகழ்வில், கூடுதல் மாவட்ட நீதிபதி, மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையில் நீதிபதிகள், குற்றவியல் நீதித் துறை நடுவா்கள், அரசு மருத்துவா், காப்பீட்டு நிதி நிறுவனத்தினா், வருவாய் துறையினா், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் என பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலா் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT