உள்ளாட்சி இடைத்தோ்தல்: இதுவரை 8 போ் வேட்புமனு
திருச்சி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தோ்தலில் இதுவரை 8 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தோ்தலில் இதுவரை 8 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள், 2 ஊராட்சித் தலைவா்கள், 19 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 24 பதவிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான புதன்கிழமை ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும், 2ஆம் நாளான வியாழக்கிழமை ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3 பேரும், 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு மேலும் 4 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா். வரும் 22ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.