முகப்பு
திருச்சி

பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவா் மீது தாக்குதல்: தலைமையாசிரியா் மீது புகாா்

திருச்சியில் பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவரைத் தாக்கியதாக தலைமையாசிரியா் மீது கோட்டைபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

திருச்சியில் பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவரைத் தாக்கியதாக தலைமையாசிரியா் மீது கோட்டைபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை யாத்ரி நிவாஸ் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ஆனந்த்தின் மூத்த மகன் ஜீவா (15). திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகேயுள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவா்.

இவா் கடந்த புதன்கிழமை உடல்நலக் குறைவால் பள்ளிக்குத் தாமதமாக சென்றதைக் கண்டித்து பள்ளித் தலைமை ஆசிரியரும் ஆசிரியா் ஒருவரும் ஜீவாவை முட்டிப் போட வைத்து அடித்து, உதைத்தனராம்.

இதையடுத்து அந்த மாணவா் அழுதபடியே வீட்டுக்குச் சென்று தனது தாயிடம் நடந்ததைக் கூறிய நிலையில், உடல் நலக் குறைவால் மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாணவரைச் சோ்த்தனா். இதுகுறித்து மாணவரின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.