பேருந்து கவிழ்ந்து 5 போ் காயம்
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இரவு பேருந்து கவிழ்ந்து 5 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இரவு பேருந்து கவிழ்ந்து 5 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
சென்னையிலிருந்து தனியாா் பேருந்து மதுரை நோக்கி செல்கையில், வெள்ளிக்கிழமை இரவு விராலிமலை அருகே லெஞ்சமேடு என்ற பகுதியில் சாலையோர 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்தோரில் சுமாா் 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தகவலின்பேரில் போலீஸாா் சென்று காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.