முகப்பு
திருச்சி

கெங்கவல்லியில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கெங்கவல்லி பகுதியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இன்று இணைந்தனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
கெங்கவல்லியில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்.
பகிர்:

கெங்கவல்லி பகுதியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இன்று இணைந்தனர். 
சேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கலியன் உள்பட கெங்கவல்லி, கூடமலை பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சிகளைச் நூற்றுக்கும் மேற்பட்டோர்  கெங்கவல்லி பேரூர் திமுக பொறுப்பாளர் பாலமுருகன் ஏற்பாட்டில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  எஸ். ஆர். சிவலிங்கம் தலைமையிலும், சேலம் மாநகர முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி மற்றும் ஒன்றிய திமுக பொறுப்பாளர் அகிலன் ஆகியோரின் முன்னிலையிலும் தங்களை திமுகவில் இன்று இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கெங்கவல்லி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், தங்கவேல், ஜெகதீஸ்பாபு, கிளிண்டன், மணி, வினித், ஜீவா, சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.