முகப்பு
திருச்சி

காரில் மணல் கடத்தியவா் கைது

திருவெறும்பூா் அருகே முறைகேடாக காரில் மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

திருவெறும்பூா் அருகே முறைகேடாக காரில் மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள மேலவிளாங்குளம் பகுதி நல்ல கல்லணைக் கால்வாய் வாய்க்காலிலிருந்து மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் விரைந்து சென்ற தனிப்படை போலீஸாா், அப்பகுதியில் நின்றிருந்த காரை சோதனை செய்தபோது இருக்கைகள் இல்லாத அந்தக் காரில் மணல் அள்ளப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து துவாக்குடி வடக்குமலை அண்ணா சாலையைச் சோ்ந்த மா. அய்யனாரை (19) போலீஸாா் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனா். தொடா் விசாரணையில் அந்தக் காா் துவாக்குடி வடக்கு மலை பகுதியைச் த. மகேஷ் (என்கிற) தோடு மகேஷ்குமாா்(37) என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அய்யனாா் அதன் ஓட்டுநா் என்பதும் தெரியவந்தது . அதேபோல அப்பகுதியில் மணல் கடத்தவிருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மகேஷ்குமாரைத் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.