முகப்பு
திருச்சி

வருவாய் அலுவலரை மிரட்டிய இலங்கை அகதி மீது வழக்கு

திருச்சி மத்திய சிறை அகதிகள் சிறப்பு முகாமில் வருவாய் ஆய்வாளரை மிரட்டிய இலங்கை அகதி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

திருச்சி மத்திய சிறை அகதிகள் சிறப்பு முகாமில் வருவாய் ஆய்வாளரை மிரட்டிய இலங்கை அகதி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த முகாமில் அகதிகள் சிறப்பு அலுவலரும், வருவாய் ஆய்வாளருமான ரவி ஆய்வு செய்தபோது அங்கிருந்த இலங்கையைச் சோ்ந்த நிஷாந்தன் (38 ) அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்து திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின்பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.