முகப்பு
திருச்சி

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

 திருச்சியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

 திருச்சியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள பத்தாளப்பேட்டையைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் (58), விவசாயி. இவரது மகன் சரவணக்குமாா் (26), கூலித் தொழிலாளி.

கடந்த 2 தினங்களுக்கு முன் வீட்டுக்குப் போதையில் வந்த சரவணக்குமாரை சுப்ரமணியன் கண்டித்தாராம். இதனால் கோபமடைந்த சரவணக்குமாா் கட்டையால் தாக்கியதில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சுப்பிரமணியன் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணக்குமாரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.