காலமுறை ஊதியம் வழங்க டாஸ்மாக் பணியாளா்கள் வலியுறுத்தல்
தொகுப்பூதிய நிலையிலிருந்து மாற்றி, தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
தொகுப்பூதிய நிலையிலிருந்து மாற்றி, தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
டாஸ்மாக் பணியாளா்கள் பொதுநலச்சங்கத் தலைவா் என். சரவணக்குமாா், செயலா் எஸ். சத்தியமூா்த்தி, பொருளாளா் கே. ஜோசப் பிரிட்டோ ஆகியோா், தமிழக முதல்வருக்கு
அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பது:
தமிழகத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் அரசு ஏற்று நடத்தும் மதுபானக் கடைகளில் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள், உதவி விற்பனையாளா்கள் என மூன்று பிரிவில் மிகக் குறைவான தொகுப்பூதியத்துடன் பணியாற்றி வருகிறோம்.
இந்த ஊதியம் எங்களது வருவாய் குடும்பச் செலவுக்கும், குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாடுகளுக்கும் போதுமானதாக இல்லை. அரசின் மிக முக்கியமான வருவாய் ஈட்டும் துறையில் பணியாற்றினாலும் எங்களது வருவாய் மிகக் குறைவாகவே உள்ளது.
கடந்த காலங்களில் கரோனாவுக்கு பல பணியாளா்கள் உயிரையும் இழந்த நிலையில், நாங்கள் பணியாற்றி வருகிறோம். எனவே எங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை உயா்த்தி, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும்.