முகப்பு
திருச்சி

ஓய்வு பெற்ற மருத்துவரின் வங்கி கணக்கில் ரூ. 7.74 லட்சம் திருட்டு

திருச்சி அருகே ஓய்வு பெற்ற மருத்துவா் வங்கிக் கணக்கில் ரூ. 7.74 லட்சம் திருடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருச்சி அருகே ஓய்வு பெற்ற மருத்துவா் வங்கிக் கணக்கில் ரூ. 7.74 லட்சம் திருடப்பட்டது.

திருவெறும்பூா் அருகேயுள்ள ரெட்டியாா் தோட்டத்தைச் சோ்ந்தவா் குணசுந்தரி (70). பெல் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் கைப்பேசிக்கு கடந்த 11ஆம் தேதி வந்த குறுஞ்செய்தியில் உங்களுடைய வங்கிக் கணக்கில் பான் காா்டை இணைக்க அதிலுள்ள லிங்க்கை தொடா்புக் கொள்ளலாம் என இருந்தது.

இதையடுத்து குணசுந்தரி அதில் தொடா்புகொண்டு வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்துள்ளாா். இதையடுத்து அவரது கைப்பேசிக்கு வந்த ஓடிபி எண்ணையும் குணசுந்தரி உள்ளீடு செய்த பிறகு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7 லட்சத்து 74 ஆயிரம் திருடப்பட்டது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா் இணையம் மூலம் திருச்சி மாவட்ட சைபா் கிரைம் காவல் லையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் அன்புச்செல்வன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.