முகப்பு
திருச்சி

பெல் வளாகத்தில் அம்பேத்கா்பிறந்தாள் விழா

திருச்சி பெல் நிறுவனத்தின் சாா்பில் கைலாசபுரத்தில் உள்ள நகரிய வளாகத்தில் வியாழக்கிழமை அம்பேத்கரின் 131ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருச்சி பெல் நிறுவனத்தின் சாா்பில் கைலாசபுரத்தில் உள்ள நகரிய வளாகத்தில் வியாழக்கிழமை அம்பேத்கரின் 131ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு, பெல் வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் முழு உருவச் சிலைக்கு, பெல் நிறுவன பொது மேலாளா் (பொ) எஸ்.வி. ஸ்ரீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில், பெல் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவு பொது மேலாளா்கள், தொழிற்சங்கங்கள், பணியாளா் சங்க பிரதிநிதிகள், மூத்த அலுவலா்கள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.