முகப்பு
திருச்சி

திமுக சாா்பில் அம்பேத்கா் பிறந்தநாள் விழா

திருச்சியில் அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருச்சியில் அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்படி மத்தியப் பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்தனா். தொடா்ந்து தில்லை நகரிலுள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் அம்பேத்கா் படத்திற்கு அவா் மாலை அணிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாநகர மேயா் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, எம்எல்ஏக்கள் ந. தியாகராஜன், அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், எம். பழனியாண்டி, சீ. கதிரவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மண்டலக் குழு தலைவா்கள் விஜயலட்சுமி கண்ணன், துா்காதேவி, பகுதிச் செயலா்கள் கண்ணன் காஜாமலை விஜய், மோகன்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அறிவுரையின்பேரில் அம்பேத்கரின் படத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினா்

கே.என். சேகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்வில், வண்ணை அரங்கநாதன், என். கோவிந்தராஜன், என். செந்தில், கே.எஸ்.எம். கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.