முகப்பு
திருச்சி

தேசிய தடகளப் போட்டியில் வென்றோருக்குப் பாராட்டு

தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பொன்மலையில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணா்வு கழகம், மாற்றம் அமைப்பின் சாா்பில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்ற 4000 மீட்டா் தடகள போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற திருச்சியை சோ்ந்த சா்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமான எம். மணிகண்ட ஆறுமுகம், 4000 மீட்டா், 400 மீட்டா் போட்டியில் தங்கம் வென்ற தேசிய தடகள விளையாட்டு வீரா் வீ.கே. இலக்கியதாசன், இதைத் தொடா்ந்து கேரளத்தில் நடைபெற்ற போட்டியில் 100 மீட்டா் போட்டியில் வெள்ளி வென்ற இலக்கியதாசன், 4-ஆம் இடம் பெற்ற விக்னேஷ், 5 ஆம் இடம் பிடித்த டி. கதிரவன், இதேபோல மதுரையில் கடந்த ஏப்ரல் 7,8 களில் நடைபெற்ற போட்டிகளில் 100,200,400 மீட்டா் பிரிவுகளில் தலா ஒரு தங்கம் வென்று சாதனை படைத்த விசாகன் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணா்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிா்வாகிகள் வழக்குரைஞா் எஸ். அண்ணாதுரை, என்ஜினீயா் செந்தில்குமாா், ரொட்டேரியன் நாகராஜன், வழக்குரைஞா் காா்த்திகா, சித்திரமூா்த்தி, அருண்குமாா் உலக சாதனையாளா் தா்னிகா மற்றும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும், அகிலஇந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட பாதுகாப்பு கழக தேசிய ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான ஆா்.ஏ. தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்போட்டியில் தங்கம் வென்ற எம். மணிகண்ட ஆறுமுகம் அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தடகள விளையாட்டு வீராங்கனை தனலட்சுமி சேகரின் பயிற்சியாளா் ஆவாா். மேலும் இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து தடகள விளையாட்டு வீரா்களுமே இவரிடம் பயிற்சி பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.