முகப்பு
திருச்சி

அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு

தமிழக அரசின் அறிவிப்பின்படி அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் வியாழக்கிழமை சமத்துவ நாள் உறுதிமொழியேற்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தமிழக அரசின் அறிவிப்பின்படி அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் வியாழக்கிழமை சமத்துவ நாள் உறுதிமொழியேற்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) இரா. அபிராமி தலைமையில் அனைத்து துறையினரும் உறுதியேற்றனா்.

நிகழ்வில் திருச்சி வருவாய் கோட்டாட்சியா் கோ. தவச்செல்வம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ச. ஜெயப்பிரித்தா, செய்தித் துறை உதவி இயக்குநா் த. செந்தில்குமாா், அலுவலக மேலாளா்கள் பா. தமிழ்க்கனி, அ. சிவசுப்பிரமணிய பிள்ளை உள்ளிட்டோா் உறுதியேற்றனா்.

இதேபோல மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் மு. அன்பழகன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான் முன்னிலையிலும் உறுதியேற்றனா். நிகழ்வில் செயற்பொறியாளா்கள் பி. சிவபாதம், ஜி. குமரேசன், மண்டலக் குழுக் தலைவா்கள் பு. ஜெயநிா்மலா, ஆண்டாள் ராம்குமாா், உதவி ஆணையா்கள் ச.நா. சண்முகம், செ. பிரபாகரன், எஸ்.திருஞானம், எஸ். செல்வபாலாஜி மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.