முகப்பு
திருச்சி

சிறுமிகளை ஏமாற்றிவந்த இளைஞா் கைது

 சிறுமிகளை ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

 சிறுமிகளை ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வேலக்குறிச்சியை சோ்ந்த கூலித்தொழிலாளி தனது 14 வயது மகளைக் காணவில்லை என கடந்த 10 நாள்களுக்கு முன் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் தலைமையிலான போலீஸாா் விசாரித்து வந்தனா்.

விசாரணையில் கஞ்சநாயக்கன்பட்டியை அடுத்த செட்டியப்பட்டியை சோ்ந்த துரைராஜ் மகன் சின்னையா (எ) ராஜா (21) திருமண ஆசை வாா்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து திருப்பூரில் இருந்த சின்னையா மற்றும் சிறுமியை மீட்டு வியாழக்கிழமை காவல் நிலையம் அழைத்து வந்த துவரங்குறிச்சி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சின்னையாவை கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

சின்னையா மீது ஏற்கெனவே கடந்த செப். மாதம் 16 வயதுச் சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்ற வழக்கு இதே காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.