திருச்சி: திருக்கடையூர் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த வி.கே.சசிகலா செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்ற கேள்விக்கு, இங்கு தான் இருக்கிறீர்கள் பொறுத்திருந்து பாருங்கள் என வி.கே.தெரிவித்தார்.
மேலும், உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை டிடிவி.தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா? என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்ல மறுத்த வி.கே.சசிகலா "கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து பிறகு பதிலளிக்கிறேன்" என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.