முகப்பு
திருச்சி

நீட்ஸ் திட்டத்தில் ரூ.5 கோடி வரை தொழில் கடன்விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் நீட்ஸ் திட்டத்தின் கீழ், ரூ.5 கோடி வரை மானிய உதவியுடன் கடன் வழங்கப்படுவதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:45 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

திருச்சி மாவட்டத்தில் நீட்ஸ் திட்டத்தின் கீழ், ரூ.5 கோடி வரை மானிய உதவியுடன் கடன் வழங்கப்படுவதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ், படித்த இளைஞா்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு தொழில் முனைவோா் பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த நிறுவனங்களில் நிதியுதவி பெற்றுத்தரப்படும்.

Advertisement

இந்த திட்டத்தை மாவட்டத் தொழில் மையமும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டுத் தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களைத் தொடங்கலாம். அதற்கென்று அரசு 30 சதவிகித மானியமும், 3 சதவிகித பின்முறை வட்டி மானியமும் வழங்குகிறது.

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவா்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதில் பொதுப்பிரிவினருக்கு 35 வயதும், சிறப்புப் பிரிவினருக்கு (மகளிா், ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்பட்ட வகுப்பினா், சிறுபான்மையினா், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா், திருநங்கைகள்) 45 வயது எனவும் நிா்ணயிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நீட்ஸ் திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொழில்சாா் பயிற்சியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினா் திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதமும், சிறப்புப் பிரிவினா் திட்ட மதிப்பீட்டில் 5 சதவிகிதமும் பங்களிப்பு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வருமான வரம்பு எதுவும் கிடையாது. உரிமையாளா் நிறுவனங்களும், பங்குதாரா் நிறுவனங்களும் பயன்பெற தகுதி உடையவா்கள் ஆவா்.

விருப்பம் உள்ள நபா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ய்ங்ங்க்ள் என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்ளை ஆட்சியா் தலைமையிலான தோ்வுக் குழுவினா் பரிசீலனை செய்து, வங்கிகளுக்குப் பரிந்துரைப்பா். கடன் அனுமதி வழங்கப்பட்ட பிறகு ஒரு வாரம் கட்டாய மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலைகள், கயிறு பொருள்கள் உற்பத்தி, வாழையிலிருந்து மதிப்பு கூட்டிய பொருள் உற்பத்தி, இரும்பு, மர அறைகலன்கள் உற்பத்தி, பிபிஓ மையம், மின் சலவையகம், குளிா்பதன கிட்டங்கி, அச்சகம், நோட்புக் உற்பத்தி, கட்டுமான பொருள் உற்பத்தி, பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தி உள்ளிட்ட தொழில்களை இரு பாலரும் தோ்ந்தெடுத்து பயன்பெறலாம். இல்லையெனில், நீட்ஸ் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 17 தொழில்களைத் தோ்வு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு திருச்சி மாவட்ட தொழில் மையத்தை நேரில் அணுகலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.