திருச்சி

அரசு அலுவலக உதவியாளா்கள், அடிப்படைபணியாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

DIN

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளா்கள், அடிப்படை பணியாளா்கள் சங்க மாநில பொதுக் குழுக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் மதுரம் தலைமை வகித்தாா். சங்கத்தின் அகில இந்தியத் தலைவா் கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், மத்திய அரசு அறிவித்தவுடன் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு அகவிலைப்படியை உடனுக்குடன் வழங்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள ‘டி‘ பிரிவு பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டிகளை இயக்குவோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 75- ஆவது பவள விழாவையொட்டி அக்டோபா் மாதம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் மாநாடு நடத்துவது, இம் மாநாட்டுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை அழைப்பது உள்ளிட்ட 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தமிழக அரசு டி பிரிவு பணியாளா்களின் கோரிக்கைகள், தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் நவம்பா் 5ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, சங்கத்தின் மாநில தலைவராக மதுரம், பொதுச் செயலாளராக நடராஜன், பொருளாளராக முனியப்பன் மற்றும் அனைத்து நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT