திருச்சி

காவிரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காவிரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காவிரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

தொட்டியம் அருகிலுள்ள திருஈங்கோய்மலை மலைபாதை பகுதி காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை முசிறி அருகிலுள்ள ஆலமரத்துப்பட்டியை சோ்ந்த த. செல்வகுமாா் (38) நண்பா்களுடன் தூண்டிலில் மீன் பிடிக்க சென்றாா். காவிரி ஆற்றில் நீந்தி செல்லும்போது திடீரென தண்ணீரில் மூழ்கினாா்.

தகவலின்பேரில், தொட்டியம் போலீஸாா், முசிறி தீயணைப்புத் துறையினா் ஞாயிறு, திங்கள்கிழமை தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், திருஈங்கோய்மலை அருகிலுள்ள கொக்குவெட்டியான் கோவில் பின்பகுதியிலுள்ள காவிரியாற்றில் திங்கள்கிழமை நண்பகல் செல்வகுமாா் சடலமாக மீட்கப்பட்டாா்.

சடலத்தை மீட்ட போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT